இன்றுடன் Nofap-ல் எனக்கு நூறு நாட்கள் நிறைவடைகிறது. Nofap உடைய மூன்று விஷயங்கள் PMO. Porn, Masturbation, Orgasm ஆகிய மூன்றையும் மேற்கொள்ளாமல் இருப்பது.
இந்த நாறு நாட்களில் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். நான் இப்படி ஆபாசப் படங்கள் பார்க்காமல் இருக்க வேண்டும், அதை விட்டுத்தள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன் பலனளிக்கவில்லை. பின் சுய இன்பத்தையும் சேர்த்து நான் கைவிடும்போது அளவற்ற, எல்லையற்ற சுய கட்டுப்பாட்டை அடைந்தேன்.
நான் நினைத்தால் இதை செய்ய முடியும் என்று நினைப்பதை கட்டுப்படுத்த முடிந்தால், மனிதன் பேர் இன்பம் அடைவான். அதற்காகத் தான் மனித இனம் அதிகாரத்தை நோக்கிச் செல்கிறது.
நானும் அடைந்தேன். உடனடி மகிழ்ச்சி தரும் இந்த செயலை நான் செய்யவில்லை, மாறாக அதைத் தாமதம் செய்தேன். பழைய சோறு வேண்டும் என்றால் ஒரு நாள் காத்திருப்பு அவசியம். அதையே வாழ்க்கைக்கு நான் அமைத்துக்கொண்டேன்.
சுய இன்பம் செய்வதில் எந்த தவறும், பிரச்சினையும் இல்லை, ஆனால் இயற்கையாகவே நம் உடல் நாம் ஒவ்வொரு முறையும் சுய இன்பம் கொள்ளும்போது, நாம் உடலுறவு மேற்கொள்வதாக நினைத்துக்கொண்டு நம் உடலில் வைத்திருக்கும் அனைத்து சக்தியையும் வெளியேற்றும். அப்படிதான் நாம் பரிணாமம் அடைந்திருக்கிறோம். இதனால்தான் நாம் சுய இன்பம் மேற்கொண்ட பிறகு சோர்வு அடைகிறோம். இதையே நாம் தினம் செய்தால், இதில் தான் நமக்கு Ultimate Satisfaction, அதாவது உச்சமான இன்பம் இருப்பதாக நம் மூளை நம்மை நம்ப வைக்கத் தொடங்கும். உண்மையில் இயற்கையாகவே இது உச்சமான இன்பம் தான். இதனால்தான் நாம் தினமும் அதற்காக ஏங்குகிறோம்.
இரவானால் உச்சமான இன்பம் கிடைக்கும் என்றால், அடுத்த நாள் வாழ்வதற்கான ஊக்கமும், உந்துதலும் நம்மிடம் இருக்காது.
ஆபாசப் படங்களுக்கு நான் அடிமையாகி இருக்கிறேன் என்று அறிந்து கொள்ள எனக்குப் பத்து வருடங்கள் பிடித்துக்கொண்டது. நாம் துன்பத்தில், துயரத்தில் இருப்பது என்றும் நமக்குத் தெரியாது. நாம் எப்போது அதை உணர தொடங்குகிறோமோ, அப்போதுதான் அதிலிருந்து நாம் மீளத் தொடங்குகிறோம். அதுபோல கடந்த வருடம் நான் பல முறை முயன்று இப்போது மீண்டு வருகிறேன்.
நாம் தினம் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் பார்த்து வந்தால் நமது மூளை மங்கிவிடும். நம் மூளை செயற்கையான இன்பத்துக்கு மாற்றிக்கொள்ளும், யாரைப் கண்டாலும் ஒரு வித காம உணர்ச்சியோடு காண்போம். ஆபாசப் படங்களில் வீடியோக்களில் வருவது போல் நிஜ வாழ்க்கையில் இருக்கும் என்று நினைத்தால் விரக்தியைத் தான் சந்திக்க நேரிடும். உங்கள் காதல், இல்லற வாழ்க்கை இரண்டுமே பாதிப்புக்குள்ளாகும். அது உங்கள் நேரத்தையும், மூளையையும் வீணடிக்கிறது. சிலர் எதையும் அளவோடு எடுத்துக்கொண்டால் அமிர்தம் எனலாம், உண்மைதான் ஆனால் நீங்கள் எடுத்துக்கொள்வதே விஷம் எண்ணும்போது அது எப்படி அமிர்தமாகும்?
ஆபாசப் படங்கள், வீடியோக்கள் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினையாக மாறி வருகிறது, அதை ஒரு சகஜமான ஒன்றாக மாற்றியும் வைத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் இதில் பெரும் பங்காற்றுகிறது. உண்மையில் பேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் ஒரு Soft Porno செயலி, Twitter ஆபாசப் படங்களைப் பகிர எந்த தடையும் இன்றி இன்றுவரை அனுமதிக்கிறது. அவை நம்மை ஆபாசப் படங்கள் நோக்கித் தள்ளுகிறது. ஏன், Internet center சென்று Mail பார்ப்பதாகக் கூறிவிட்டு ஆபாசப் படங்கள் வீடியோக்கள் பார்ப்பதைப் பற்றி ஒரு மீம் இருக்கிறது. அதை ஒருமுறை பகிரும்போது பரவாயில்லை, தொடர்ந்து பகிரும்போது, அதை எவ்வளவு ஊக்கப்படுத்துகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். நானே எனது நண்பர்கள் மொபைலில் ஆபாசப் படங்கள் பகிரும் வாட்ஸ்ஆப் குழுக்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். செயலியில் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இதைவிட எனக்குத் தெரிந்த சொந்தம் ஒருவருடைய மொபைலை வேறொரு விஷயத்துக்காக எடுத்த போது, அதில் Google
Chrome-ல் ஆபாச வலைத்தளம் திறந்தே இருந்ததைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதில் முக்கியமான விஷயம் அது ஒரு பெண்ணுடையது. சமூகத்தில் ஆண் பெண் பேதமின்றி அனைவரும் ஆபாசப் படங்களை நுகர்ந்து வருகிறார்கள்.
என்னுடைய அடிமைத்தனம் என்பது அதிகபட்சம் ஐந்து முதல் பத்து நிமிடம் தான் என்றாலும் அது மோசமானது. அதன் விளைவு பல வருடங்கள் நீடிக்கிறது. கடந்த நூறு நாட்கள் தான் நான் இதைப் பார்க்காமலிருந்தேன், இன்னும் அதன் காட்சிகள் என் மூளையில் மங்கலாக இருக்கின்றது. அது முழுமையாகச் செல்ல பல நாட்கள் பிடிக்கும், கெட்ட பழக்கத்தை ஏற்படுத்துவது எளிது, நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் கடினம். நான் இதிலிருந்து மீள முயன்று கொண்டு இருக்கும்போது கோவிட் காலத்தில் ஓடிடி-யின் வீச்சு வேகமெடுத்தது போல், எனது நண்பன் பாலு இதைப் பற்றிப் பகிரும்போது, நான் இதில் தனியாக இல்லை என்று உணர்ந்தேன். மீள்வதும் வேகமெடுத்தது. இன்றும் நாங்கள் இருவரும் அதில் பயணிக்கிறோம். அதனால் இதைப் பற்றி நமக்கு நெருக்கமானவர்களிடம் பேச வேண்டும், இதைப் பற்றி என் வீட்டிலும் பேசினேன், அவர்களும் புரிந்து கொண்டார்கள். ஆக வீட்டிலும் நாம் இதைப் பற்றிப் பேச வேண்டும். பேசுவதுதான் மீள்வதற்கான ஒரே வழி.
Every form of addiction is bad, no matter whether the narcotic be alcohol or idealism - Carl Jung
Wonderful brother
Arumai sago👌