top of page
Writer's picturePari

சுய ஒழுக்கம் என்னை காப்பாற்றியது எப்படி?

Updated: May 1, 2023

என் வாழ்க்கை
என் கையில் இல்லை,
வாழ்க்கை மீதான
கட்டுப்பாட்டை இழந்து வருகிறேன்

என் பற்கள் அனைத்தும் விழுவதாக
கனவு காண்கிறேனே!
என்னால் உறுதியாக சொல்ல முடியும்!

இது 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதியில் நான் எழுதியது. அந்த இடைப்பட்ட மாதங்களில் அவ்வப்போது என் பற்கள் அனைத்தும் உடைந்து நொறுங்வதாக கனவுகள் கண்டேன்.


கனவுகளுக்கு நான் நிறைய மதிப்பளிப்பவன். நான் பல கனவுகளை கதைக்கான கருவாக உருமாற்றியுள்ளேன். ஏன் கனவுகளிலேயே வாழ்ந்தால் என்ன என்றெல்லாம் சிந்தித்திருக்கிறேன். பற்கள் விழுவதாக கனவு வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள கூகுள் செய்தேன். அதில்,


எந்தவொரு பொருளும் வலுவிழக்கும்போது உடைந்து போகும். பற்கள் உடைந்து போகிறது. அதன் அர்த்தம்,

  • நீங்கள் அதிக மன அழுத்ததில் உள்ளீர்கள்.

  • உங்கள் வாழ்க்கை உங்கள் கையிலிருந்த நழுவுகிறது.

  • நீங்கள் மத ரீதியாகவோ, ஆன்மிக ரீதியாகவோ, தத்துவார்த்த ரீதியாகவோ அதீதமாக சிந்திப்பதால் இவ்வாறு கனவு வரலாம்.

  • உங்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கோ அல்லது பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும் முன் இவ்வாறு கனவு வரலாம்.

  • உங்களுடைய சுற்றத்தார், நீங்கள் நேசிக்கும் யாரேனும் இறந்தாலும் இவ்வாறு கனவு வரலாம்


என்று காரணங்களை அடுக்கியிருந்தார்கள்.


ஒரு நண்பனுடைய அம்மாவும், மற்றொரு நண்பனுடைய தாத்தாவும், பாட்டியும் கொள்ளை நோயில் மாண்டு போனார்கள். அவை என்னை பாதித்தது உண்மை தான், ஆனால் இறந்தவர்கள் எனக்கு அவ்வளவு நெருக்கமில்லை. தவிர நான் நேசித்த யாரும் அப்போது மரணிக்கவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் எதுவும் எனக்கு நடைபெறவில்லை என்று, அதை கற்பனையாக உருவகப்படுத்தி எழுதி வைத்துவிட்டு அலட்டிக்கொள்ளாமல் கடந்துவிட்டேன்.


எதர்ச்சியாக அக்டோபரில் மீண்டும் பற்கள் குறித்து நான் எழுதியதை படிக்க நேரும்போது, அதை மறுபகுப்பாய்வு செய்தேன். அதில் கூறியிருந்த அனைத்தும் உண்மை. நண்பர்களுடைய இழப்பு. நான் கடந்த இரண்டு வருடங்களாக மத ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் அதீதமாக சிந்தித்தது. அதிக மன அழுத்தத்தில் இருந்தது. என் வாழ்க்கை என் கையிலிருந்த நழுவ தொடங்கியது. நான் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள தயாரானேன்.


இறுதியாக அதில் குறிப்பிடாத ஒன்று இருக்கிறது, அதுதான் சுய ஒழுக்கம் இல்லாமை. எனக்கு சுய ஒழுக்கம் கிஞ்சிற்றும் இல்லை.


சுய ஒழுக்கத்தை பேணாத எவரும் என்றும் சரியான பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்கள் திசை தெரியாமல் எங்கு செல்வது, என்ன செய்வது என்ற சிந்தணையிலேயே மூழ்கி இருப்பார்கள்.


சிந்திப்பவன் சோம்பேறி அல்ல, சிந்திப்பதை செயல்படுத்தாதவன் தான் சோம்பேறி.

நான் சோம்பேறி. கற்றுக்கொண்டும், சிந்தித்து கொண்டும் இருந்தேன ஒழிய செயலாற்றவில்லை. அதன் விளைவு மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, பொறுப்பற்ற தனம், வேலையின்மை முதலியான வந்து ஒட்டிக்கொண்டது. முன்னேற அனைத்து வசதிகளும் இருந்தும் நான் எதுவும் செய்யவில்லை.

இதை உணரும் உச்சி வேளையில்தான் என் நண்பன் ஒரு பிரச்சினையை பற்றி என்னிடம் பகிர்ந்தான். பின் பௌத்ததை வாசித்தேன். அந்த இரு உரையாடல்களும் என் பிரச்சினை எது என்று உணர்த்தியது. உடனே மீள தொடங்கினேன்.


நவம்பர் 6, 2021 முதல் சுய ஒழுக்கத்தை மேற்கொண்டேன். அன்று முதல் இன்று ஜனவரி ஐந்தாம் தேதி வரை அறுபது நாட்கள் நிறைவடைகிறது. என் வாழ்க்கை முற்றிலும் மாற்றமடைந்தாக உணர்கிறேன். கடந்த இரண்டு மாதங்களில் நான் என்னுடைய சொந்த நலன்களை மட்டுமே குறித்து சிந்தித்து செயலாற்றினேன்.


Meditation, Morning pages, உணவுமுறை, சரியான தூக்கம் என்று பல பழக்கங்களை ஏற்படுத்தி என்னை தகவமைத்துக்கொண்டேன்.

மேலும் இவற்றை கண்காணிக்க 'Habit Tracker' தயார் செய்து பின்பற்றவும் தொடங்கினேன். அது நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைவுப்படுத்தி கொண்டே இருந்தது.


இவற்றால் நான் புத்துயிர் பெற்றேன். நான் சுய ஒழுக்கம் பேணுவதை கண்டு மற்றவர் பாராட்டினர். முக்கியமாக என் உடல் என்னை பாராட்டியது, அதற்கு தேவை இதுதான். அதில் ஏற்பட்ட இன்பம் வேறெதிலும் கிட்டவில்லை. அதனால் மேலும் உத்வேகத்தோடு இயங்க தொடங்கினேன்.


அப்பா, அம்மா, அண்ணனின் பழைய டைரிகளில், வாட்ஸ் அப்பில், டாக்கில் நான் சிந்திப்பதை எழுதி வைத்துக்கொள்வேன். சிலவற்றை மட்டும் பேஸ்புக்கில் பதிவிடுவேன். ஆனால் அதிலொரு ஒழுங்கு இல்லை. முக்கியமாக விமர்சனங்களை எதிர்கொள்ள எனக்கு பயமும் இருந்திருக்கிறது. எனவே பல மாதங்களுக்கு முன்னமே வலைப்பதிவு (Blog) ஒன்றை தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். ஆகையால் நான் எழுதுவதை ஒழுங்கமைக்க இந்த வலைப்பதிவை அறுபதாம் நாள் தொடங்குகிறேன்.


கவிதை, கதைகள், கட்டுரைகள் என என் எண்ணங்களையும் எழுத்தையும் பகிர இதை முதன்மையாக பயன்படுத்த போகிறேன். இதை முடிந்தவரை உயிர்ப்போடு வைத்திருப்பேன். உயிர்ப்போடு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி உறுதியாக என்னால் கூறும் அளவிற்கு தன்னம்பிக்கை பிறந்துள்ளது. கண்டிப்பாக சறுக்கல்கள் வரும், அதை கடந்து முன்னேறுவேன்.


நான் கடைப்பிடித்த அனைத்திலும் பொறுமையை கற்றுக்கொண்டேன். இந்த வலைப்பதிவுக்கான வேலையை கடந்த மாதமே முடித்துவிட்டேன், இருந்தும் அறுபதாம் நாள் தான் தொடங்க வேண்டும் என்று பொறுமையக காத்திருந்தேன். அதுதான் வாழ்க்கையில் அனைவருக்கும் தேவை.


இனி கனவுகளில் வருபவை எனக்கு முக்கியமல்ல. ஏனென்றால் நான் நிஜ கனவுகளை நோக்கி ஓட தொடங்கியுள்ளேன்.


144 views6 comments

Recent Posts

See All

6 則留言


karthickgd77
2022年1月06日

Super pari !!

சிந்திப்பவன் சோம்பேறி அல்ல, சிந்திப்பதை செயல்படுத்தாதவன் தான் சோம்பேறி ndra words unkitta irunthu kekubothey therinjuduchi ni evalo practical uh move on ayirukkannu !! Ithu apdiye consistency uh thodaraa vazhthukal ! Maja Aayega !!!!! 💙

按讚
paritamilselvanoff
paritamilselvanoff
2022年1月06日
回覆

Thanks Karthi, thank you so much, கண்டிப்பா தொடர்வேன்... Maja Aayega 😉💖

按讚

srikanthlukia
2022年1月05日

Thanks for sharing your thoughts.I found this really inspiring because I've been wanting to get consistent with things too.

- Sai

按讚
paritamilselvanoff
paritamilselvanoff
2022年1月06日
回覆

Thanks Sai, am glad that you found it inspiring, hope you get things done and all the best for the endeavor 🤗

按讚

Balu K
Balu K
2022年1月05日

சபாஷ் நண்பர் பாரி அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துகள்

按讚
paritamilselvanoff
paritamilselvanoff
2022年1月06日
回覆

நன்றி நண்பரே 😂💖

按讚
This image has three writers Camus, Dostoevsky & Kafka with a quote
bottom of page